Search This Blog

Tuesday, August 7, 2012

சாமஜவரகமநசாதுஹரித்-samaja varakamana sathu hrith


                                                                                                

பல்லவி 
சாமஜ வரக மந சாது ஹரித் 
சாரசாப் ஜபால காலாதீத விக் யாத(சாம)
அனுபல்லவி  
சாமநிக மஜ சுதா மய கா நவிசக்ஷண
கு ணசீல த யாலவால மாம் பாலய(சாம)
சரணம்  
வேத சிரோ மாத்ருஜ சப்தச்வர-
நாதா சலதீப்  ச்வீக்ருத    
யாவகுல முரளிவாத நவி-  
நோத மோஹநகர த்யாக ராஜவந்த நீய
Meaning
யானையை  ஒத்த கம்பீரமான நடையுடயவனே! சாதுக்களின் இதயமாகிற தாமரையை மலர் விக்கும் சூரியனே!காலத்தை கடந்தவனே!
புகழுடையவனே!
     சாமவேத்கத்திலிரிந்து பிறந்த அமுதமயமான கா   சாஸ்திரத்தில் பண்டிதனே!நல்லொழுக்கமுடையவனே!தயையின் தேக்கமே! என்னைப் பாலிப்பாயாக!
      வேதங்களுக்குச் sசிகரமான ஒங்காரமென்னும் அன்னையிடம் தோன்றிய சப்த்தஸ்வரங்களைக் கொண்ட நாதமெனும் மலையை    
ஒளிபெறச் செய்யும் விளக்கே!யாதவ குலத்தை ஏற்றுக்கொண்டவனே!
புல்லாங்குழல் வாசிப்பில் இன்பமடைபவனே!மோகன ரூபனே!த்யகராஜனால்   வணகப்படுபவனே! 

No comments:

Post a Comment