Search This Blog

Tuesday, March 27, 2012

விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்-vittu viduthalayaruppai intha

பல்லவி 
விட்டுவிடுதலை யாகிநிற்பா யிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே.
1,எட்டு திசையும் பறந்து திரிகுவை 
ஏறியக் காற்றில் விரைவோடு நீந்துவை 
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ் 
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)
2.பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்  
பீடையி லாததொர்  கூடுகட் டிக்கொண்டு 
முட்டை தருங்குஞ்சை  காத்து மகிழவைதி 
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)
3.முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும் 
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு 
மற்ற பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின் 
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று (விட்டு)

No comments:

Post a Comment