Search This Blog

Showing posts with label St.Thiagaraja. Show all posts
Showing posts with label St.Thiagaraja. Show all posts

Sunday, August 19, 2012

ப ண்டுரீதி கொ லுவிய்யவய்ய ராம-Pandureethi kolu viyyyavaayya rama




பல்லவி
ப ண்டுரீதி  கொ லுவிய்யவய்ய ராம   (ப)
அனுபல்லவி
துண்டவிண்டிவாநி மொத லைந மதா
து ல ப ட்டி நேல கூ ல ஜேயு நிஜ (ப)

சரணம்
ரோமாஞ்சநே க நகஞ்சுகமு
ராமப  கத்துட நே முத் ரபி ள்ளயு
ராமநாமமநே வாக ட் க மிவி
ராஜில்லுநய்ய த்யாகராஜுநிகே
The lyrics is in telugu. The meaning in tamil.
இராம உமது சமூகத்தில் சேவகனாகப் பணிபுரியும் பேற்றை அளிப்பாயாக. (கரும்பை வில்லாகயுடைய மன்மதனின் சேஷ்டையாகிய) காமம் முதலிய எதிரிகளைப் பிடித்து நிர்மூலமாக்கும் ஆற்றல் கொண்ட  உன் (சேவகனாகும் வாய்ப்பை அருள்வாயாக).(உனது பக்தியின் மூலம் ஏற்படும் ) உடல் சிலிர்ப்பு  என்ற கவசமும்,இராம  பக்தன் என்ற முத்திரை வில்லையும், இராமநாமமென்னும் சிறந்த போர்வாளும் இத்தியகராஜனிடம் விளங்குகின்றன. ஐயனே! ஆகவே என்னை சேவகனாக ஏற்றுக்கொள்!

Saturday, May 26, 2012

எந்து கோ நீ மனஸு கரக து-enthuko nee manasu karakathu

பல்லவி 
எந்து கோ நீ மனஸு கரக து 
ஏமி நேரமோ தெலிய (எந்)  
அனுபல்லவி 
எந்து ஜூசிநகா நி த சரத(எந்)  
சரணம் 
There are three saranams for the song.The artist did not choose to sing them.However the full meaning of the song is given.
Meaning

எக்காரணத்திலாலோ உன் மனம் இரங்கவில்லை.( நான்) செய்த பிழை என்னவோ அறியேன்.எங்கு (எதை)நோக்கினும் (அதை)தயரதன் மைந்தனான இராமனாக எண்ணும் என்னிடம் (உன் மனம் இளகவில்லை)
     என்னிடம் அன்பு பூண்டவர்கள்கூட   என்மீது பொறாமை கொள்கின்றனர்.என்னை வெறுப்பவர்களோ "இவன் எம்மாத்திரம் " என்று பல விதங்களை என்னைத் திட்டுகின்றனர்."இவன் ஆதரவிற்குத் தகுந்தவனல்லன்"என்று திரும்பிப் பார்க்கவும் யோசித்தனர். நியமமாக என்னைக் காப்பவர் யாருமிலரென்று உன்னையே வேண்டி நிற்கும் என் மீது (உன் மனம் இறங்கவில்லை)
     செல்வம், மக்கள், பெண்டிர் ஆகிவை கண்டு "இவை தம்மை சேர்ந்தவை"யென்று மயங்கினர்.முன்பின் தெரியாத பணக்காரர்களின் பின்னால் சுற்றி திரிந்தனர்.இறகு வம்சமெனும் கடலில் உதித்த சந்திரனே!ஸ்ரீராம!என்னையும் அக்கதிக்கு ஆளாக்காமல். உன்னை ஆயிரக்கணக்கில் கோரிக்கைகள் கேட்கும் என்னைக் கருணையுடன் நீ காப்பாற்றவேண்டும்.
     பற்றில்லாத இராமபிரானே!இவ்வளவு அலட்சியம் செய்யலாகாது.சரணடைந்தவைகளைக் காப்பவனே!உன்னையே நம்பினேன்!தாரக நாமத்தாய்!பராத்பர!இத்யகராஜனின் சித்தமிசை வசிப்பவன் நீயே யென்று தெரிந்து மிகவும் வேண்டினேன். நீயே கதியென்று இரவு பகலாக ஆயிரம் தடவை முறையிட்ட என் மீது (உன் மனம் ஏனோ இர ங்கவில்லை).







Wednesday, May 23, 2012

அபராத முல மாந்பி யாது கோவய்யா-aparathamul manbi yathu kovayya

பல்லவி 
அபராத முல மாந்பி யாது கோவய்யா(அ)  
அனுபல்லவி 
க்ருபஜூசி ப் ரோசிதேஅபரதமுல 
கீர்த்தி கலதி க நீகு(அ)  
சரணம் 
4.சரணு ஜொச்சிந நந்து கருணிஞ்சவே
வர த்யாகராஜநுத வசமுகா தி க நாது(அ) 
Meaning   
என் குற்றங்களை மன்னித்து என்னை ஆட்கொள்வாய் அய்யனே! கருணையுடன் என்னைக் காத்தால் அது உனக்குப் பெருமையே அல்லவா!  
மிகுந்த பொறாமை, செருக்கு முதலியவற்றால் குருடனாகி நித்யகர்மாக்கள் செய்பவன் போல் நடித்து நல்லோரை நிந்தனை செய்தேன்.பார்ப்பவர்களுக்கு எதிரில் சபம் செய்வது போல் நடித்தும் உண்மையாக உன் திருவடிகளை தியானிக்கவில்லை.பெண்டிரை நாடும் மக்களுடன் சேர்ந்து வீண் பேச்சில் காலங்கழித்தேனே தவிர வாழ்விற்கு இதம் தரும் உன் சரித்திரத்தைப் படித்ததில்லை.உன்னையே சரணடைந்த என் மீது கருணை காட்டுவாய், இராம!இனி என்னால் தாள முடியாது. 
        

Thursday, May 17, 2012

களல நேர்ச்சிந முநு ஜேஸிநதி-kalala nerchina munu jesinathi

பல்லவி 
களல நேர்ச்சிந முநு  ஜேஸிநதி  
கா க நேமி யரவை நாலுகு (க)
அனுபல்லவி 
கலிமி லேமுலகு காரணம்பு நீவே 
கருண ஜுட வே கடு புகோஸமை (க)
சரணம்  
கோரி நூல கொண்ட தீஸி சிங்கி லிமுநி 
கூர்மி பு ஜிஞ்செநா வைரி தம்முடு 
ஸாரமைந ரங்க நி இல்லு ஜேர் ச்செநா
ஸரஸ த்யாக  ராஜவிநுத ப்ரோவவே (க)
Meaning
வயிறு வளர்ப்பதற்காக அறுபத்துநான்கு கலைகளை கற்றாலும் (ஒருவனுக்கு)ஊழ்வினைப் பயனைத் தவிர வேறு என்ன நிகழும்?செல்வம் வறுமை  ஆகிய இரண்டிற்கும் காரணம் நீயே.கருணையுடன் என்னைக் கண் பார்.
     மிகுந்த விருப்பதுதுடன் எள்ளுருண்டையை பெற்ற சிங்கிலி முனிவர் தன்னிச்சைப்படி அதை உண்ண முடிந்ததா?(வேதசாரமாகிய)ஸ்ரீ ரங்கநாதனை விபீஷணன் இலங்கைக்கு எழுந்தருளச் செய்ய  முடிந்ததா?(ஆகவே)சரசகுனம் படைத்த நீயே என்னைக் காக்கவேண்டும் .

கருணா ஸமுத் ர நநு-karunasamudra nanu

பல்லவி 
கருணா ஸமுத் ர நநு 
காவவெ ஸ்ரீ ராமப த் ர (க)

அனுபல்லவி 
சரணாக த ஹ்ருச்சி த் ர 
சமந நிர்நிதநித் ர (க )
சரணம் 
நா பாபமு நாதோ நுண்டே 
ஸ்ரீப  நீ பி ருது கேமி ப் ரதுகு 
ஏபாபுல சாபமோ 
எந்து கீ சலமு த் யாக ராஜநுத (க)
Meaning
கருணைக் கடலே!ஸ்ரீராமபத்திர!என்னைக் காப்பாயாக.சரணமடைந்தவர்களின் இதயதாபத்தை யகற்றுபவனே!(தமோ குணமெனும்)உறக்கத்தை ஒழித்தவனே!
    என் வினை என்னுடனேயே இருந்துவிட்டால் உன் விருப்பத்திற்கு ஏது பிழைப்பு? திருமகள் நாயகனே!இது எந்த பாவிகள் இட்ட சாபமோ?என்மீது உனக்கேன் இக்கோபம்?

Tuesday, May 8, 2012

ஓ ராஜீவா க்ஷ ஓரசூபுலு ஜூசே-O Rajeevaksh orajubulu joose

பல்லவி 

ஓ ராஜீவாக்ஷ ஓரசூபுலு ஜூசே 
வேரா நே நீகு வேரா (ஓ )
அனுபல்லவி 
நேரநி நாபை நேரமுலெஞ்சிதே 
காராத நி ப ல்கேவாரு லேநி நந்நு (ஓ)
சரணம் 
மாவரஸுகுண உமாவர ஸந்நுத
தே வர த யசேஸி ப் ரோவக ராதா 
பாவந ப க்த்ஜநாவந மகாநு 
பாவ த் யாக ராஜபா வித இங்க நந்து (ஓ )

Meaning:
ஒ தாமரைக் கண்ணா?என்னை நீ ஓரப்பார்வை பார்ப்பதேன்?நான் வேற்று மனிதனா?ஒன்றும் அறியாத என்மீது மாந்தர் குற்றம் கண்டுபிடித்தால் "அப்படி செய்யலாகாது "என்று கூற எனக்கு யாருமிலர்.
     இலக்குமி நாயகனே!சுகுணனே!சிவனால் துதிக்கப்படுபவனே!தேவனே!தயையுடன் என்னைக் காக்கலாகாதா?தூயவனே!அடியாரைப
 பாலி ப்பவனே!மஹானுபாவனே! 

Wednesday, April 25, 2012

எவரிகை யவதார மெத்திதிவோ-evarikai yavathaara methithivo

பல்லவி 

எவரிகை யவதார மெத்திதிவோ
இபுடை ந தெ லுபவய்யா ராமய்யா நீ (எ)

அனுபல்லவி 

அவநிகி ரம்மநி பிலிசிந மஹரா- 
ஜெவடோ வாநிகி ம் ரொக்கெநு ராம (எ)

சரணம் 

வேத வர்ண நீயமௌ நாமமுதோ 
விதி ருத் ருலகு மேல்மியகு ரூபமுதோ 
மோத ஸத நமகு படு சரிதமுதோ
முநிராஜவேஷியௌ த்யாக ராஜநுத நீ (எ)

Meaning:

     யார் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ? இப்பொழுதாகிலும் கூறுவாய் இராமையா! உன்னை இவ்வுலகிற்கு எழுந்தருளுமாறு அழைத்த மகானுபாவரை நான் வணங்குகிறேன்.
     வேதங்களால் வருணிக்கபெரும் திவ்ய நாமத்துடனும்,பிரமனுக்கும் சிவனுக்கும் மேலான உருவத்துடனும்,ஆனந்ததிற்கு உறைவிடமான நற்சரிதத்துடனும், ராஜரிஷியின் கோலத்துடனும் (நீ யார் பொருட்டு அவதரிதனையோ?

     

Tuesday, April 24, 2012

எ ந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaloorake yunthu joothamu

பல்லவி 


எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு
யெவரடி கே வாரு லேதா ஸ்ரீராம (எந் )


அனுபல்லவி 


கொந்நாளளு ஸாகேதபுர மேல லேதா 
கோரிக முநுலகு கொ ந்ஸாக லேதா (எந்)


சரணம் 


ஸதி மாடல நாலகிஞ்சி ஸத் ப க்த கோடுல 
ஸம்ரக்ஷிஞ்சக லேதா 
மதிமந்துல ப் ரோசே மதமு மாத நலேதா 
ஸததமது ஸ்ரீ தியாக ராஜூ நம்மக லேதா (எந)









Saturday, March 3, 2012

பஞ்சரத்தின கீர்த்தனை- ஜகாத நந்த காரக

பல்லவி: ஜகாத நந்த காரக
                  ஜய  ஜானகீ பிராண நாயக (ஜ)

அனுபல்லவி:  க க நாதி ப ஸத்குலஜ ராஜராஜேஸ்வர
                              ஸுகு ணாகர ஸுரசேவய பவ்யதா யக ஸதா ஸகல (ஜ)
saranam 1.அமர தாரக நிசய குமுத ஹித
                  பரிபூர்ணாநக ஸு ரஸ ர பூ -
                  ஜ த தி பயோதி வாஸஹரண
                   ஸு ந்த ரதர வதந ஸுதா; மய வசோ
                   பிருந்த கோவிந்த ஸாநந்த
                   மாவ ராஜரப்த சுப கராநேக(ஜ )
saranam 2.  நிக ம  நீரஜம்ரு தஜ போஷகா-
                  நிமிஷவைரி வாரித ஸமீரண
                  க, க துரங்க ஸதகவிஹ்ருதா லயா-
                  க ணித வானராதி ப நதாங்க்ரியுக (ஜ)
saranam 3.  இந்த் ர நீலமணி ஸ ந்நிபா பக ந
                  சந்தி ர ஸூர்ய நயநா பிரமேய வா-
                   கீ ந்தர ஜநக ஸகலேச சுப் ர நா -
                   கே ந்த் ரசயந சமநவைரி ஸநநுத (ஜ)
saranam 4.   பாத விஜித மௌநிசாப ஸவபரி
                   பால வர மந்த்ர க் ரஹண்லோல
                   பரம ஸாந்த சித்த ஜனகஜாதி ப
                   சரோஜப வ வரதா கி ல (ஜ)
saranam 5.   ஸ்ருஷ்டி ஸ்தி, த்யந்தகார காமித
                   காமிதப,லதா ஸமாநகா தர
                   சசீபதி நுதாப் தி, மத ஹரா நுராக
                    ராக ராஜித  கதா ஸாரஹித (ஜ)
saranam 6.    ஸஜ ஜ ந மாநசாப் தி ஸுதா கர கு-
                    ஸு மவிமாந ஸு ரஸா ரிபுகராப் ஜ
                    லாலித சரணாவகு ணாஸு ரக ண
                    மத ஹரண ஸநா நாஜநுத (ஜ)
saranam 7.    ஓங்கார பஞ்சர கீர புர
                     ஹர ஸரோஜ ப வ கேசவாதி
                     ரூப வா ஸ வரி புஜநகாந்தக கலா-
                     த ர கலாத ராப்த க் ருணாகர
                     சரணாக த ஜ நபால  ந ஸு மநோ -
                     ரமண நிர்விகார நிக  ,மஸா ர தர (ஜ)
saranam 8.     கரத்ருத, சரஜாலாஸுர மதா ப
                     ஹரணாவ நீஸ ர ஸு ராவ ந
                     கவீந பி லஜமௌநி கருத சரித்ர
                     ஸநநுத ஸ்ரீ தியாக ராஜநுத (ஜ)
saranam 9      புராண புருஷ நருவராத்மா ஜா
                     ச்ரித பராதீ ந க ர விராத ராவண
                     விராவணாநக பராசர மநோ -
                     ஹராவிக்ருத தியாகராஜ ஸந்நு த (ஜ)
சரணம்10.  அக் ணித குண்  கநகசேல          
                      ஸால வித ளநாருனாப ஸமாந சரணா -
                      பார மகிமாத் பு த சுகவிஜ ந
                       ஹ்ருத்ஸத ந ஸு  ரமுநி கணவிஹித
                      கலச நீரநிதி ரமண பாபக ஜ
                      ந்ரு ஸிம்ஹ வர த்யகராஜாதி நுத (ஜ)
Meaning: 
அகில சகதிற்கும் சதா ஆனந்தம் விளைவிப்பவனே! சீதா பிராட்டியின் பிராண
நாதனே!நீ வெற்றியுடன் விளங்குவாயாக! சூரிய பகவானின் நற்குலத்தில் பிறந்தவனே!ராஜாதி ராஜனே!நற்குணக்கடலே!தேவரால் வணங்கப்படுபவனே!
மங்களம் தருபவனே!
     (நீ) தேவர்கள் என்னும் நட்சத்திரக் கூட்டத்தினிடையே விளங்கும் சந்திரன் போன்றவன்.நிறைவு கொண்டவன். களங்கமற்றவன்.வானவர்களுக்குக் கற்பதருவைப்போன்றவன்.தயிர், பால், நிறைந்த பாணைகளைத் திருடுபவன்.முவழகன்.அமுதூரும் வாக்கையுடையவன் . ஆநிரை மேய்ப்பவன், மகிழ்ச்சி நிறைந்தவன்.திருவின் நாயகன்.என்றும் இளமையொடிருப்பவனே!நேசர்களுக்கு நன்மை புரிபவன்.
     (நீ)வேதங்கலாகிற தாமரைகள் பொழியும் அமுதத்தினால் வளர்க்கப்பட்டவன்.தேவர்களின் சத்ருக்களாஹிர மேகங்களை சிதறவடிப்பதில்
காற்றைப் போன்றவன்.கருடவாகனன்.நற் கவிகளின் இதயத்தை இருப்பிடங்க்கொண்டவன்.கணக்கற்ற வானரத் தலைவர்கள் வணங்கும் பரதன் .
     (நீ)இந்திர நீலமணியைப்போல் ஒளி பொருந்திய சரீரமுடையவன்.சூரிய சந்திரரை விழிகளாக உடையவன்.உகிக்கவும் முடியாத மகிமைஉடையவன்.வாகீசனாகிய பிரமனின் தந்தை.சர்வேஸ்வரன்.வெள்ளிய ஆதிசேஷன் மீது துயில்பவன்.காலனை வென்ற பரமசிவனால் வணங்கப்பெருபவன் . 
     (நீ)திருவடி மகிமையால் கௌதம ரிஷியின் சாபத்தை தீர்த்தவன்.வேள்வி காப்பவன்.(பலா , அதிபலா என்ற இரு )உத்தமமான மந்திரங்களைக் கற்றவன்.சாந்தம் நிறைந்த உள்ளதவன்.சீதை நாயகன்.தாமரையில் தோன்றிய பிரமனுக்கு வரமளிதவன்.
     (நீ)ஆக்கல், அளித்தல்  (காத்தல்), அழித்தல் ஆகிய முத்தொழில் புரிபவன். எண்ணற்ற கோரிக்கைகளை ஈடேற்றுபவன்.இணையற்ற வடிவழகன்.இந்திரனால் துதிக்கப்பெருபவன்.சமுத்ர ராஜனின் செருக்கை யடக்கியவன்.பக்தியினாலும் இசையினாலும் பிரகாசிக்கும் இராமாயணக் கதையின் சாரமானவன்.இதந்தருபவன்.
     (நீ)நல்லோர் மனமென்னும் கடலில் முளைத்தெழும் சந்திரன்.புட்பக விமானமுடையவன் .அரக்கியாகிய சுரசையை வென்ற அனுமனின் தாமரைக்கைகளால் வருடப்பெறும் திருப்பாதன்/துஷ்டகுணமுடைய அரக்கரின் கொழுப்பையடக்குபவன்.அழிவற்றவன்.நான்முகனால் வணங்கப்பெருபவன் .
     (நீ) ஓங்கார (பிரணவ) மென்னும் கிளி ,புரமெரித்த சிவன், தாமரையானாகிய பிரமன் , விஷ்ணு ஆகிய உருவங்களை யுடையவன்.இந்த்ரசித்தின் தந்தையாகிய இராவணனை வதைத்தவன்.பிறை சூடிய சிவபெருமானின் நேயன்.கருணை புரிபவன்.சரண் புகுந்த மாந்தரைப் பாலிப்பவன்.நன்மைனத்தரை மகிழ்ப்பவன்.வேறுபாடற்றவன்.வேடங்களின் சாரம்.
     (நீ)கரங்களில் அம்புகளை ஏந்தியவன்.அரக்கரின் வெறியை அடக்குபவன்.தேவரையும் அந்தணரையும் காப்பவன்.கவிகளில் சூரியன் போன்ற வால்மீகியால் இயற்றப்பெர்ற்ற சரிதிரத்தினால் நன்கு போற்றப்பட்டவன்.தியாகராஜனால் வணங்கப்பெருபவன்.
     (நீ)ஆதிபுருடன்.சக்கரவர்த்திதிருமகன் அண்டியவரின் வசமாகுபவன்.சுரன்,விராதன்,இராவணன் ஆகியோரை வதைத்தவன்.பாவமற்றவன்.பரசரரின் உள்ளம் கவர்ந்தவன்.விகாரமற்றவன்.தியாகராஜனால் துதிக்கப்பெருபவன்.
     (நீ) அனந்த கல்யாண குனங்களையுடையவன் .பீதாம்பரம் அணிந்தவன்.மராமரங்களை பிளந்தவன்.சிவந்த திருப்பாதன்.அளவிலா மகிமையுடையவன்.அற்புத நற்கவிகளின் இதயத்தில் அமர்பவன்.தேவருக்கும்,முனிவர்களுக்கும் ஆப்தன்.பாற்கடலில் உதித்த இலட்சுமி தேவியின் நாயகன்.பாவங்கலேன்னும் யானைகளையழிக்கும் நரசிங்கம் .தியாகராஜன் முதலிய பக்தரால் துதிக்கப்பெருபவன்.
                   
 

    

Monday, January 2, 2012

தவ தா சோஹம் தவ தா சோஹம்


பல்லவி 
தவ தா சோஹம் தவ தா சோஹம்
தவ தா சோஹம் தா சரதே (த)
சரணம்
1.வரம்ருது பா ஷ விரஹிததோ ஷ
நரவரவேஷ தா சரதே (த)

2.சரஸிஜிநேத்ர பரமபவித்ர
ஸுரபதிமித்ர தா சரதே (த)

3.நிநநுகோரிதிரா நிருபமசூர
நநநேலுகோரா தா சரதே (த)

4.மநவிநிவிநுமா மறவ ஸமயமா
இநகுல தநமா  தா சரதே (த)

5.கநஸமநீல முநிஜ ந ல
கநகது கூல தா சரதே (த)

6.தர நீவண்டி தை வமு லேத ண்டி
சரணநுகொண்டி தா சரதே (த)

7.ஆக மவிநுத ராக விரஹித
தியாகராஜநுத தா சரதே (த)

Meaning


தயரதன் மைந்தா!நான் உனது தாசன்/உன்னடிமை. இனிய பேசுடையவனே!(நீ)
களங்கமற்றவன். சிறந்த மானிட அவதாரம் எடுத்தவன். தாமரைக்கண்ணன்.தூய்மை வாய்ந்தவன். இந்திரனின் தோழன்.இணையற்ற சூரன். நான் உன்னையே வேண்டி நின்றேன். என்னை ஏற்றுக்கொள்.என் விண்ணப்பதைக்கேள். என்னை மறக்க இதுவா தருணம்? சூரியகுல செல்வமே!
மெகா வண்ணனே! முனிவரைக் காப்பவனே!பீதாம்பரமணி ந்தவனே!இப்புவியில் உன்னைபோன்ற தெய்வங்கள் எவருமிலர். நான் உன்னையே சரணடைந்தேன்!மறைகளால் போற்றப்படுபவனே!பற்றில்லாதவனே!தியாகராஜன் வணங்கும் தாசரதீ










Sunday, November 14, 2010

Nithisala sukamaa ramunee -நிதி சால ஸுக மா ராமுநி ஸந்

    Thyagaraja began his musical training under Sonti Venkataramanayya, a noted music scholar, at an early age. Sonti Venkataramanayya invited Thyagaraja to perform at his house in Thanjavur. On that occasion, Thyagaraja sang  Endaro Mahaanubhavulu, the fifth of the Pancharatna kritis. Pleased with Thyagaraja's composition, Sonti Venkataramanayya informed the King of Thanjavur about Thyagaraja's genius. The king sent an invitation, along with many rich gifts, inviting Thyagaraja to attend the royal court. Thyagaraja, however was not inclined towards a career at the court, and rejected the invitation outright, composing another gem of a kriti, Nidhi Chala Sukhama (English: "Does wealth bring happiness?") on this occasion. Angered at Thyagaraja's rejection of the royal offer, his brother threw the statues of Rama, Thyagaraja used in his prayers into the nearby Kaveri river. Thyagaraja, unable to bear the separation with his Lord, went on pilgrimages to all the major temples in South India and composed many songs in praise of the deities of those temples.
பல்லவி

நிதி சால  ஸுக மா ராமுநி ஸந்-
நிதி ஸேவ  ஸுக மா நிஜமுக ப ல்கு மநஸா (நிதி)

அனுபல்லவி

த தி நவநீத க்ஷீரமுல ருசோ தா ச
ரதி த்யாந பஜந ஸுதா ரஸமு ருசோ (நிதி)
(niti
சரணம்

த ம சமமநு க ங்கா ஸ்நாநமு ஸுகமா கர்-
த ம து ர்விஷய கூபஸ்நாநமு  ஸுகமா
மமத ப ந்த நயுத நரஸ்துதி ஸுகமா
ஸூமதி  த்யாக ராஜநுதுநி கீர்த்தந ஸுகமா (நிதி)

The lyrics is in telugu.The meaning in tamil.
    செல்வம் முதலியன மிகுந்த இன்பத்தை அளிக்ககூடியவையா? அல்லது ஸ்ரீராமரின் ஸ்ந்நிதியில் சேவை புரிவது சுகம் தருமா?மனமே! உண்மையாக இதை கூறுவாயாக. தயிர், வெண்ணை,பால் சுவை தருமா? அல்லது தயரதன்(தசரதன்) மைந்தனை த்யானித்து பஜனை செய்வது ருசி தருமா? அடக்கம்,சாந்தம் எனப்படும் கங்கா ஸ்நானம் சுகமா அல்லது சிற்றின்பமென்னும் சேறு நிறைந்த கிணற்றில் நீராடுவது சுகமா?அகம்பாவத்தினால் பினைக்கபெற்ற நரஸ்துதி (மனிதரை பாடுதல்) சுகமா?  அல்லது நன்மனத்தனாகிய  இத்தியகராஜன் வணங்கும் தெய்வத்தைத் துதிபாடுதல் இன்பமா?