Search This Blog

Showing posts with label St.Thiagaraja-P.Unnikrishnan. Show all posts
Showing posts with label St.Thiagaraja-P.Unnikrishnan. Show all posts

Wednesday, July 25, 2012

ராரா மாயிண்டிதா க ரகு-Rara mayindi thaka Raghu


பல்லவி 
ராரா மாயிண்டிதா க  ரகு-
வீர சுகுமார ம்ரொக்கேரா (ரா)
அனுபல்லவி 
ராரா தசரத குமார நந்நேலு 
கோரா தாளலேரா ராம (ரா)
சரணம் 
தி க்கு நீவநுசு தெ லிஸி நநு ப் ரோவ 
க ரக்குந ராவு கருணநு நீசே 
ஜிக்கியுநந தெல்ல மறதுரா யிக 
ஸ்ரீத்யாக ராஜுநி பா  க்யமா(ரா)
Meaning  
என் இல்லத்திற்கு எழுந்தருள்வாய்!இரகுவீரனே!வடிவழகனே!உன்னை வாங்குகிறேன் வாராய்!தயரதன் மைந்தனே!என்னை ஏற்றுக்கொள்க! நான் இனி பொறுக்கேன்.
    தாமரைக்கண்ணனே!நான் விரும்பிய கோரிக்கைகள் கை கூடுவதற்கு முன்னமே உன் வழியில் நீ செல்வதைக் கண்டு உளம் நொந்தேன்.நல்லோரைக் காப்பவனே!இனிது புறப்பட்டு இன்றாவது (வருக)
     அதிகாலையில் எழுந்து மிகுந்த புண்ணியத்துடன் எனக்கு புத்தி சொல்லி காப்பற்றுகிறாயே தவிர, பால் வடியும் உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே உன்னருகில் நின்று உன்னைத் தினமும்  பூசிக்குமாறு (நீ வரவேண்டும்)
      எனக்குக் கதி நீயே யென்று என்னைக் காப்பாற்ற விரைவில் கருணையுடன் வாராயோ உன்னுடன் நான் ஒன்றிருப்பதைத் திருப்பவும் மறந்தனையோ?ஸ்ரீ தியாகராஜனின் பாக்கியமே!

Thursday, May 24, 2012

இந்த சௌக்யமநி நே ஜெப்பஜால-intha sowkyamanine jeppajaala


Part I

பல்லவி 
இந்த சௌக்யமநி நே ஜெப்பஜால 
எந்தோ யேமோ யெவரிகி தெ லுஸுநோ (இ )
அனுபல்லவி 
தா ந்த ஸீதாகாந்த கருணா-
ஸ்வாந்த  ப்ரேமாது லகே தெலுஸுநு கா நி (இ )
சரணம் 
ஸ்வர ராக லய ஸுதா ரஸமந்து 
வர ராமநாமமநநே கணட சக-
கெர மிஸ்ரமு ஜேஸி  பு ஜிஞ்சேசங்-
கருநிகி  தெலுஸுநு த்யாகராஜவிநுத(இ ) 
Meaning 
இத்தனை இன்பம் இது என்பதை வருணிக்க என்னால் இயலுமா? அது எத்த னையோ, என்னவோ, யாருக்குத் தெரியுமோ ?புலன் களையடைக்கியவனே!சீதையின் கணவனே!கருணை நிறைந்த உள்ளத்தாய்!உன்னிடம் அன்பு பூண்டவர்களாலேயே  அவ்வின்பம் நுகரக்கூடியது. ஸவரம், ராகம், தாளம் என்னும்  அமுத ரசத்தில் உயர்ந்த இராமநாமம் என்ற கற்கண்டைக் கலந்து புசிக்கும் சிவபெருமானுக்குத்தான் தெரியும் அவ்வின்பம்.