Search This Blog

Showing posts with label St.Thiagaraja-M.S.Subbulakshmi. Show all posts
Showing posts with label St.Thiagaraja-M.S.Subbulakshmi. Show all posts

Sunday, September 23, 2012

தே வாதி தே வ ஸதா சிவ-Devathi deva sada siva





 பல்லவி 
தே வாதி  தே வ ஸதா சிவ 
தி நநாத ஸு தா கர ஹந நயந (தே)

அனுபல்லவி 
தே வேச பிதாமஹ ம்ருக் ய சமா-
தி கு ணாப ரண கௌ ரீரமண    (
தே)

சரணம் 
ப வ சந்த் ரகலாத ர நீலக 
பா நுகோடி ஸங்காச ஸ்ரீசநுத
தவ பாத ப க்திம் தே ஹி தீ நப ந்தோ 
த ர ஹாஸவதந த்யாக ராஜநுத 


The meaning in tamil.
தேவாதி தேவனே! சதாசிவ! சூரியன்சந்திரன்அக்னி ஆகிய முக்கண்களை யுடையவனே! (நீ) இந்திரன்பிரமன் ஆகியோரால் தேடப் பெறுபவன் (எட்டாதவன்).சாந்தம் முதலிய குணங்களை அணிகளாக உடையவன்பார்வதி நாயகன்பரமசிவன். பிறைசூடிய பெருமாள். நீலகண்டன். கோடி சூரியப் பிரகாசன்.விஷ்ணுவினால்துதிக்கபெருபவன். தீனபந்து. சிறுநகை தவழும் வதனனே! உன் திருவடி பக்தியை எனக்கருள்.

Saturday, August 4, 2012

நிதிசாலாசுகமாராமுநிசந






பல்லவி 
நிதி சாலா சுக மா ராமு நி சந  
நிதி சேவ சுகமா நிஜமுக ப ல்கு மநசா(நி)
அனுபல்லவி    
ததி நவநீத க்ஷீரமுல ரூசோ தா ச 
ரதி தியா ந  பஜந சுதா ரசமு ரூசோ (நி
சரணம் 
த ம சமமநு   கங்கா ச்நாநமு சுக மா கர-
த ம து ர்விஷய கூபச்நாநமு சுக மா
மமத பந்த நயுத நரஸ்துதி சுக மா 
சுமதி தியாக ராஜnuநுதிநி  கீர்த்தந சுக மா   
 Meaning
செல்வம் முதலியவை மிகுந்த இன்பத்தை aஅளிக்கக் கூடியவையா?alஅல்லது ஸ்ரீ ராமனின் sசன்னதியில் சேவை புரிவது சுகம் தருமா? மனமே!உண்மையாக இதைக் கூறுவாய்.தயிர் வெண்ணை, பால் முதலியன சுவை தருமா? அல்லது தயரதன் மைந்தனைத் தியானித்து பஜனை செய்வது ருசி தருமா?aஅடக்கம், சாந்தம்  எனப்படும் கங்கா ஸ்நானம் சுகம் தருமா?அல்லது சிற்றின்பமேனும் சேறு நிறைந்த கிணற்றில்  நீராடுவது சுகமா? அகமபாவத்தினால் பினைக்க பெற்ற நரஸ்துதி(மனிதரைப் பாடுதல்)
சுகமா?அல்லது நன்மனத்தவனாகிய தியாகராஜன் வணங்கும் தெய்வத்தை tதுதிபாடுதல் இன்பமா?  

Substance of song:
Is (possessing) wealth a greater pleasure, or is service in Rama's presence a greater pleasure? Answer me truthfully, O mind! Are curds, butter and milk more tasty? Or, is the nectarine essence of the meditation on and bhajana of Dasharatha's son more tasty? Is a bath of self-control and tranquility in the Ganga more comforting? Or, is a bath in the well of evil sense-objects more comforting? Is extolling of mere human beings, fettered in egotism more comforting? Or, is singing on the pure-minded Lord, praised by Tyagaraja, more comforting?

Thursday, August 2, 2012

பக்கல நிலப டி கொலிசே முச்சுட-pakkala nilapadi kolise muchuda


பல்லவி 
பக்கல நிலப டி கொலிசே முச்சுட 
பா க தெல்ப ராதா (ப)
அனுபல்லவி 
சுக்கலராயநி கே ரு மோமு க ல 
ஸுத தி ஸீதம்ம சௌமித்ரி ராமுநி கிரு(ப)
சரணம்  
தநுவிசே வந்தந மொனரிஞ்சு சுந்நாரா 
சநுவுந நாம கீர்த்தந ஸேயு சுந்நாரா 
மநஸுந தல சி  மைமறசி யுந்நாரா 
நெநருஞ்சி த்யகராஜு நிதோ ஹரிஹரி மீரிரு(ப)
meaning
சந்திரனைப் பழிக்கும் முகத்தையும்,அழகிய பற்களையுமுடைய அன்னை சீதையே!இலக்ஷ்மணனே! இராமபிரானுக்கு இரு புறமும் நின்று நீங்கள் சேவை புரியும் மர்மத்தை எனக்கு தெரிவிக்கலாகாதா?
     சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அவரை வணங்குகிறீர்களா? அல்லது பக்தியுடன் நாமசங்கீர்த்தனம் செய்கிறீர்களா?மனத்தில் தியானித்து மெய் மறந்து போகிறீர்களா?இத்தியகராஜனிடம் அன்பு கூர்ந்து (மர்மத்தை விளக்கலாகாதா?)

Wednesday, August 1, 2012

க்ஷீரஸாகரசயநநந்நு-kheerasagarasayana nannu



பல்லவி 
க்ஷீரஸாக ரசயந நந்நு  
சிந்தல பெட்டவலெநா ராம(க்ஷீ)
அனுபல்லவி 
வாரணராஜு  நு  ப் ரோவநு வேகமே 
வச்சிநதி விந்நாநுரா ராம (க்ஷீ)
சரணம்  
நாரீமணி கி ஜீரலிச்சிநதி 
நாடே நே விந்நாநுரா 
தீருடெள ராமதா ஸுநி ப ந்த மு 
தீ ர்ச்சிநதி  விந்நாநுரா 
நீரஜாக்ஷிகை நீரதி தா டிந
நீ கீர்த்திநி  விந்நாநுரா 
தாரகநாம த்யாகராஜ நுத 
த யதோ நேலுகோரா  ராமா(க்ஷீ)
Meaning 
பாற்கடலில் பள்ளிகொன்டவனே!இராம!என்னை நீ சோகத்தில் ஆழ்த் தவேண்டுமா?கஜேந்திரனைக் காக்கநீ விரைந்து வந்த வரலாற்றைக் கேட்டிருக்கிறேன்.
திரௌபதிக்கு நீ ஆடையளித்து (அவள் மானத்தைக் காத்ததை)நான் அன்றே கேள்வியுற்றிருக்கிறேன்.வீரராகிய (பத்திராசல)ராமதாசரின் தளையை நீ நீக்கியதைக் கேட்டிருக்கிறேன்.தாமரையொத்த கண்களையுடைய சீதைக்காக நீ கடல் கடந்த புகழையும் கேட்டிருக்கிறேன்.தாரக நாமத்தாய்!தயையுடன் என்னை ஏற்றுக்கொள்.

Saturday, June 16, 2012

தெர தீயக ராதா லேர்நி -Thera theeyaka radha lerni


பல்லவி 
தெர தீயக ராதா லேர்நி 
திருபதி வேங்கடரமண மதஸ ராமநு (தெ)
அனுபல்லவி 
பரமபுருஷ த ர்மாதி மோக்ஷமுல 
பாரதோலு சுந்நதி நாலோநி (தெ)
சரணம்  
1.இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந 
ஈக தகு லு ரீதி யுந்நதி 
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு 
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி(தெ) 

2.மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி 
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி  செறிசி நட் லுந்நதி(தெ)

3. வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு  
வச்சி தகுலு ரீதி யுந்நதி 
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந  
த் யாகராஜநுத மதமத்ஸரமநு  (தெ) 
 திருப்பதியில் விளங்கும் வேங்கடரமண!என்னுள்ளிருக்கும் பொறாமையென்ற திரையை நீ விலக்கலாகாதா?பரமபுருஷனே!அது தர்மம்  முதலிய நான்கு வகை புருஷார்த்தங்களை என்னிடம் அணு கவொ ட்டாமல் விரட்டியடிக்கிறது.
     சித்தமாக உணவருந்தும் சமயம் அன்னத்தில் ஈ விழுந்ததது போலவும்,ஹரித்தியானம் செய்யும் பொழுது மனம் பறைச்சேரியை நாடுவது போலவும்,  பசி கொண்ட மீன்கள் வலையில் அகப்பட்டுகொள்வது போலவும்,ஒளி வீசும் விளக்கிற்கெதிரில் மறைவு அமைத்து பாழ் செய்வது போலவும், வலையென்று விலங்குகள் அகப்பட்டுகொள்வது
போலவும் (இப்பொ றா மைத்  திரை மறைக்கிறது) உன் திருவுள்ளத்தைப் 
பின் பற்றும் இத் த்யாகராஜனிடம் மதம், பொறாமை ஆகிய திரையை நீ விளக்கியருளலாகாதா?

Sunday, May 20, 2012

கொலுவையுந்நாடே கோதண்டபாணி-koluvaiyunnade kothandapani

  

பல்லவி 
கொலுவையுந்நாடே   கோத ண்ட பாணி (கொ )
அனுபல்லவி 
தொலிகர்ம மணக ஜூதாமு ராரே  
தோய ஜாரி ரோஹிணி கூ டி ந ரீதி (கொ )
சரணம் 
மநஸு ரஞ்ஜில்ல ஸுரஸதுலு அணி-
மாது லு  கொலுவ வே யிவந்நெ
கநகசலாகநு கே ரு ஸீதா 
காந்ததோநு த்யாக ராஜ விநுதுடு (கொ)

Meaning
சந்திரனும் ரோஹினியும் ஒன்று கூடியதுபோல் (சீதையுடன் கூடி)கோ தண்டபாணியாகிய இராகவன் கொலு வீற்றிருக்கிறான்.நமது பழவினைகள் அனைத்தும்  நீங்குவதற்கு அவனை சேவிப்போம் வாரீர்  !

     மனத்திற்கு ஆனந்தம் அளித்துக்கொண்டு,தேவஸ்தீரீகளும் அணிமா முதலிய ஐஸ்வரியாங்களும் சேவிக்க சொலிக்கும் பொற் கம்பியையொத்த சீதா தேவியுடன் (கோதண்டபாணி கொலு வீற்றிருக்கிறான் சேவிப்போம் வாரீர் !)