Search This Blog

Friday, July 6, 2012

தெலிஸி ராமசிந்தநதோ நாமமு-thelisi ramasinthanatho namamu



பல்லவி 
தெலிஸி ராமசிந்தநதோ நாமமு 
ஸேயவே  ஒ மநஸா  

அனுபல்லவி 
தலபுலந்நி நிலிபி நிமிஷமைந 
தாரகரூபுநி நிஜத்வமுலநு 
சரணம் 
ராமாயந சபலாக்ஷுல பேரு 
காமாதுல போருவாரு வீரு 
ராமாயந ப்ரஹ்மமுநகு பே ரு
ஆமாநவ  ஜநநார்த்தலு தீறு 
Meaning
மனமே!உனக்குள் தோன்றும் பலவித எண்ணங்களை நிறுத்திவிட்டு, ஒரு நிமிடமாவது தாரக நாம ஸ்வரூபனின் உண்மையான தத்துவத்தை தெரிந்து,இராமனிடம் சிந்தையை நிலைநிறுத்தி  நாம சங்கீர்த்தனம் செய்வாயாக..
"ராமா" என்ற சொல்லிற்குப் பெண் என்ற பொருள் உண்டு.இவ்விதம் பொருள் கூறுவோ காமம் முதலியவற்றுடன் போர் .புரிவார் ஆவர்."ராமா"என்றால் பரப்ரம்மம் என்ற உண்மையான பொருளை உணர்பவனின் துன்பங்கள் விலகிப்போகும்..


இவ்விதமே "அர்க்க"என்பதற்கு எருக்குமரம் என்று  பொருள் கூறுவோரின் குரங்குப்புத்தி எப்படி தீரும்?"அர்க்க"என்ற சொல்லுக்கு 
சூரியன் என்ற பொருளை அறிபவர்களுக்குக் குதர்க்கம்  என்ற இருள் அகன்றுவிடும்.


"அஜ" என்ற ஆடு என்று அர்த்தம் கூறுபவர்கனின் கோரிக்கைகள் எங் னம் ஈடேறும்? "அஜ"என்றால் பிரமன் என்ற சரியான பொருளை உணர்ந்தால் வெற்றி பெறலாம்..


No comments:

Post a Comment