பல்லவி
எந்து கோ நீ மனஸு கரக து
ஏமி நேரமோ தெலிய (எந்)
அனுபல்லவி
எந்து ஜூசிநகா நி த சரத(எந்)
சரணம்
There are three saranams for the song.The artist did not choose to sing them.However the full meaning of the song is given.
Meaning
எக்காரணத்திலாலோ உன் மனம் இரங்கவில்லை.( நான்) செய்த பிழை என்னவோ அறியேன்.எங்கு (எதை)நோக்கினும் (அதை)தயரதன் மைந்தனான இராமனாக எண்ணும் என்னிடம் (உன் மனம் இளகவில்லை)
என்னிடம் அன்பு பூண்டவர்கள்கூட என்மீது பொறாமை கொள்கின்றனர்.என்னை வெறுப்பவர்களோ "இவன் எம்மாத்திரம் " என்று பல விதங்களை என்னைத் திட்டுகின்றனர்."இவன் ஆதரவிற்குத் தகுந்தவனல்லன்"என்று திரும்பிப் பார்க்கவும் யோசித்தனர். நியமமாக என்னைக் காப்பவர் யாருமிலரென்று உன்னையே வேண்டி நிற்கும் என் மீது (உன் மனம் இறங்கவில்லை)
செல்வம், மக்கள், பெண்டிர் ஆகிவை கண்டு "இவை தம்மை சேர்ந்தவை"யென்று மயங்கினர்.முன்பின் தெரியாத பணக்காரர்களின் பின்னால் சுற்றி திரிந்தனர்.இறகு வம்சமெனும் கடலில் உதித்த சந்திரனே!ஸ்ரீராம!என்னையும் அக்கதிக்கு ஆளாக்காமல். உன்னை ஆயிரக்கணக்கில் கோரிக்கைகள் கேட்கும் என்னைக் கருணையுடன் நீ காப்பாற்றவேண்டும்.
பற்றில்லாத இராமபிரானே!இவ்வளவு அலட்சியம் செய்யலாகாது.சரணடைந்தவைகளைக் காப்பவனே!உன்னையே நம்பினேன்!தாரக நாமத்தாய்!பராத்பர!இத்யகராஜனின் சித்தமிசை வசிப்பவன் நீயே யென்று தெரிந்து மிகவும் வேண்டினேன். நீயே கதியென்று இரவு பகலாக ஆயிரம் தடவை முறையிட்ட என் மீது (உன் மனம் ஏனோ இர ங்கவில்லை).
No comments:
Post a Comment