Search This Blog

Monday, April 30, 2012

ஒகமாட ஒகபா ணமு-okamaada okapanamu

பல்லவி 

Dr.Balamuralikrishna
ஒகமாட ஒகபா ணமு
ஒகபத் நீவ்ரதுடே மனஸா (ஒ)

அனுபல்லவி 

ஒக சித்தமுக லவாடே 
ஒகநாடு நு மறவகவே (ஒ)

சரணம் 

சிரஜீவித்வமு நிர்ஜர 
வர சௌ க்ய மொஸங்கு நே 
த ர ப ரகே தே வுடே
த்யாக ராஜநுடே (ஒ) 

Meaning:
மனமே!அவன் ஒரு சொல், ஒரு கணை,ஒரு பத்தினி,இவற்றை நியமமாக உடையவன்.கலங்காத சித்தத்தை யுடையவன்.அவனை ஒரு நாளும் மறவாதே!நீண்ட ஆயுள், இந்த்ரபோகம் ஆகியவற்றை அளிப்பவன்.இவ்வுலகில் நடமாடும் தெய்வம்.த்யாகராஜன் வணக்கும் மூர்த்தி.

Elara Sri Krishna - Dakshayani

ஏலரா ஸ்ரீ க்ரிஷ்ணா நாதோ-elara sree krishnaa natho

பல்லவி 

ஏலரா ஸ்ரீ க்ரிஷ்ணா நாதோ 
சலமு எலரா க்ரிஷ்ணா நீ (கே)

அனுபல்லவி 

ஏலரா யீ பா த தாள-
ஜாலரா த யஜூட நீ (கே)

சரணம் 

ஸ்ரீரமாலோல நந்நு ப் ரோவ
பா ரமா நிந்நு நம்மிந நாபை
நேரமா யிடு மம்மெஞ்சிதே
தூ ரமா நீகு க ம்பீ ரமா (கே)
Meaning 
ஸ்ரீ கிருஷ்ணா என்மீது உனக்கேன் இக்கோபம்?இத்துயரை என்னால் தாளமுடியுமா?தயவு காட்ட உனக்கேன் இந்தக் கோபம்?இலக்குமியை உகப்பவனே!என்னை காப்பது உனக்குப் பாரமா?உன்னையே நம்பிய என்மீது குற்றமா?இப்படி எங்களை நீ நினைத்தால் நாங்கள் உன்னை நிந்தனை செய்யமாட்டோமா?இது உனக்கு கம்பீரமா?


ஏல நீ த யராது பராகு ஜேஸே-ela nee thayarathu paraku jese

பல்லவி 

ஏல நீ த யராது பராகு ஜேஸே
வேல சமயமு கா து (ஏ)

அனுபல்லவி 

பா ல கநகமயசேல ஸஜநபரி-
பால ஸ்ரீ ரமாலோல வித்ருதசர 
ஜால சுப த கருணாவால க ந 
நீல நவ்ய வநமாலிகாப ரண(ஏ) 

சரணம் 

ராரா தே வாதி தே வ ராரா ம ஹாநுபா வ 
ராரா ராஜீவநேத்ர ரகு வரபுத்ர 
ஸாரதர ஸுதா பூர ஹ்ருத ய பரி 
வார ஜலதி கம்பீ ரத நுஜஸம்-
ஹாரமத ந ஸுகுமாரபு த ஜந வி-
ஹார ஸகலக்ருதிஸார நா து பை (ஏ)

Meaning
உன் தயை என் வரவில்லை?என்னை பாராமுகம் செய்துவிடுவாயோ?என்னை காக்க இது தருணமல்லவா?
    பாலனே!பீதாம்பரம் அணிந்தவனே!நல்லோரைப் பாளிப்பவனே!திருமகளை உகப்பவனே!அம்புகளை ஏந்தியவனே!சுபம் தர்பவனே!கருணைநிதியே!முகில்வண்ண !வன மாலையணிந்தவனே!
     தேவாதிதேவனே!வருக!மகானுபாவனே!வருக!தமரைக்கண்ணனே!
வருக!ரகுகுலத்தோன்றலே!சிறந்த அமுதம் நிறைந்த உள்ளத்தவரைப் 
பரிஜனங்களாக உடையவனே!கடலை ஒத்த கம்பீரம வாய்ந்தவனே!
அரக்கரை மாயப்பவனே!மதனனை நிகர்த்த அழகனே!அறிஞருடன் உறவாடுபவனே!சகல வேதங்களின் சாரமே!

ஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது-epanitho janminchthini-

பல்லவி


ஏபநிதோ ஜ ந் மிஞ்சிதிநநி நீ வெஞ்சவலது
                                                                               ஸ்ரீ ராமநே (நே)
அனுபல்லவி 


ஸ்ரீபதி ஸ்ரீ ராமசந்திர நீ சித்தாநிகி தெலியதா நே (நே)


சரணம் 


வால்மீகாதி முநுலு நருலு நிந்து 
வர்ணிஞ்சிநி நாயாஸ 
மேல்மியையுண்டு ஸ்தப க்துலு 
மெச்சுதுரே த்யகராஜ நு தா நே (நே)


Meaning:


லக்ஷ்மிநாயகனே! ஸ்ரீ ராமச்சந்திர!நான் எக்காரியம் புரிவதற்காக பிறந்தேன் என்று நீ என்னன்னாலாகாது. (அது உன் புகழை பாடுவது என்று)உன் உள்ளத்திற்கு தெரியாதா?வால்மீகி முதலிய முனிவர்களும்.
பிற மனிதர்களும் உன்னை வருணித்தால் என் ஆசை தீருமா?உத்தமர்களாகிய பக்தர்கள் ;மெசுவார்களா?

Tippirajapuram Hari, Mridangam, Music Academy

ஏமநி பொக டு து ரா ஸ்ரீ ராம நிந்(நே-emani podaduthuraa-

பல்லவி 

ஏமநி பொக டு து ரா ஸ்ரீ ராம நிந்(நே)

அனுபல்லவி 

ஸ்ரீ மந்நபோ மணி வம்ச ல- (நே)

சரணம் 

சிவுநிகி தாமஸ கு ணமிச்சி கமல-
ப வுநிகி ராஜஸ கு ணமொஸகி சசி-
த வு நி கர்வஹருத யுநிகா ஜேஸிந 
தா சரதி த்யாக ராஜவிநுத நிந்(நே)

Meaning:
 ஸ்ரீ ராம!சூரிய வம்ச திலகனே!அலைகடல் துயில்பவனே!உன்னை நான் என்னவென்று புகழ்வேன்? சிவனுக்கு தாமஸ குணத்தையும், நான்முகனுக்கு ராஜஸ குணத்தையும், சசிதேவியின் நாயகனாகிய இந்தரனுக்கு கர்வத்தையும் அளித்துவிட்டு (நீ மாத்திரம் சுத்த ஸத்வ
ஸ்வரூபனாக) விளங்கிய தசரதன் மைந்தனே!

Sunday, April 29, 2012

MS Subbulakshmi: Ye nati nomu phalamo

ஏநாடி நோமு ப லமோ-enati nomu palamo



பல்லவி
 

ஏநாடி நோமு ப லமோ
ஏ தா ந ப லமோ (ஏ)

அனுபல்லவி 

ஸ்ரீநாத ப் ர ஹ்மகைநு நீது 
ஸேவ தொர குநா தநகு க லுகு ட(ஏ)

சரணம் 
1.நேநு கோ ரிந கோர்க்குலெல்லநு
நேடு தநகு நெரவேரெநு 
பா நுவம்சதிலக நாபாலி 
பா க் யமா ஸஜ்ஜந யோக் யமா (ஏ)

2.நீது தா பு நீது ப்ராபு தொ ரிகெநு 
நிஜமுகா நே நி சொம்மைதி நி 
ஆதி தே வ ப் ராணநாத நா-
தங்கமுந நுஞசி பூஜிஞ்ச தந (ஏ)  

3.ஸுந்தரேச ஸு குணப் ருந்த த சரத 
நநத நாறவிந்த நயந பாவந 
அந்த கா ட த்யாக ராஜந த ஸக 
மநுப விம்ப தொ ரிகெ ரா ப ளிதந (ஏ)
Meaning
என்று நோற்ற நோன்பின் பயனோ இதுஎக்கொடையின் பயனோ?திருமகள் நாயகனே!பிரமனுக்கும் உனது சேவை கிடைக்குமா?அது எனக்கு கிடைப்பதற்கு(நான் என்நோன்பு நோற்றேனோ?
     நான் கோரிய கோரிக்கைகள் அனைத்தும் இன்று நிறைவேறின. சூரிய குல திலகமே !என்னைக்காக்கும் பாக்கியமே!
     உன் சமீபமும் ஆதரவும் எனக்குக் கிடைத்தன. உண்மையில் நான் உன் பொருளானேன்.ஆதிதேவனே!ப்ரானாதனே!உன்னை என் மடிமீது வைத்து பூசிக்க வாய்ப்பு கிடைத்தது.
    பேரழகனே!நல்லோரால் சூழ்ப்பெருபவனே!தசரதன் மைந்தனே!தாமரைக்கண்ணனே!தூயவனே!அழகிய வடிவததாய்!தியாகராஜனால் வணங்கபெருபவனே! பரமானந்தம் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

Saturday, April 28, 2012

பல்லவி 

ஏதாவுநரா நிலுகட நீகு
எஞ்சிசூட நக பட வு (ஏ)

அனுபல்லவி 

சீதா கௌ ரீ வாகீ ச்வரி யனு
ஸ்ரீரூபமுலந்தா கோ விந்தா (ஏ)

சரணம் 

பூ கமலார்க்காநில நப முலந்தா 
லோக கோடுலந்தா 
ஸ்ரீ கருட கு த்யாக ராஜ கரார்ச்சித
சிவ மாத வ ப்ரஹ்மநு ல யந்தா 

Meaning:

எவ்விடத்தில் உனது இருப்பிடம்?எண்ணிப்பார்த்தால் நீ எங்குமே அகப்படுவதில்லை. சீதை (இலக்குமி), பார்வதி, சரஸ்வதி யென்னும் திருவின் உருவங்களிலா? அல்லது பூமி, ஜலம், சூரியன்,காற்று,ஆகாயம் இவற்றிலா?பல கோடி உலகங்களிலா?கோவிந்த!மங்களம் தருபவனே!தியாகராஜனால் அர்ச்சிக்கப்படுபவனே!சிவன், விஷ்ணு, பிரமன் என்னும் (மும்மூர்த்திகளின்) தொற்றங்களிலா?(எவ்விடதில் உனது உறைவிடம்?)




நாத லோலுடை ப் ரஹ்மா-natha loludai brahmananda

பல்லவி 

நாத லோலுடை ப் ரஹ்மா-
நந்த மந்த வே மநஸா(நா)

அனுபல்லவி 

ஸ்வாது ப லப்ரத ஸப்த-
ஸ்வர ராக நிசய ஸஹித-(நா)

சரணம் 

ஹரி ஹராத்ம பூ ஸுரபதி
சரஜந்ம கனேசாதி 
வரமௌநு லுபாஸிந்சரே
த ர த்யாக ராஜு தெளியு (நா)

Meaning:
      மனமே! நாதத்தில் ஆசை கொண்டு அதிலேயே திளைத்து பிரம்மானந்தம் அடைவாயாக!இனிய பலன்களை யளிக்கும் ஸ ப்தசுரங்கள், ராகக்கூட்டங்கள் முதலியவற்றுடன் கூடியது அது.
லால்குடி ஜெயராமன் 
       விஷ்ணு, சிவன்,பிரம்மா. இந்திரன்,சுப்ரமணியர், கணபதி,முதலிய சிறந்த மகான்கள் உபாசனை செய்ததே அந்நாதம் ஆகும்,

Note: A viewer from New Delhi following me always.Thanks for him.Let him hear this song and comment.This song is dedicated to him.
  

எந்தவேடு கொந்து ராக வ-enthavedu konthu raagava

பல்லவி 

எந்தவேடு கொந்து ராக வ 
பந்தமேலரா ஓ ராக வ (எந்)

அனுபல்லவி 

சிந்த தீ ர்ச்சுட கெந்த மோடி ரா 
அந்தாத்ம நா செந்த ராகநே (எந் )

சரணம் 

சித்தமந்து நிந்நு ஜூசு சௌக் யமே 
உத்தமம்ப நுசு உப்பொங்கு சுநு 
ஸத்தமாத்ரமா சால நம்மிதிநி 
ஸார்வ பெள ம ஸ்ரீத்யாகராஜநுத(எந்) 

Meaning:
     நான் எத்தனை வேண்டிக்கொண்டும் ஓ ராகவ! உனக்கேன் இப்பிடிவாதம்? என் கவலையை தீர்ப்பதற்கு இதனை பிகுவா?ஆத்மா ரூபனே!என்னருகில் வராமல் (உனக்கேன் இப்பிடிவாதம்?)
     என் சித்தமிசை உன்னைத் தரிசிக்கும் சுகமே மேலானதென்று மகிழ்திருக்கின்றேன்.அனைத்திற்கும் சாரமானவனே 
உன்னை முற்றிலும் நம்பினேன்.ஒருவனைப் பணியாது உலகால்பவனே!



Supriya----kumar
    
O.S Thiagarajan
VedapraveenM-
achiraju.

Friday, April 27, 2012

எந்த நேர்ச்சிந எந்த ஜூசிந-entha nerchina entha jusina

பல்லவி 

எந்த நேர்ச்சிந எந்த ஜூசிந 
எந்த வாரலைந காந்ததா ஸுலே (எந்)

அனுபல்லவி 

சந்த தம்பு ஸ்ரீகாந்த ஸ்வாந்த ஸித்-
தா ந்தமை ந மார்க சிந்தலேநிவா (எந்)

சரணம் 

பர ஹிம்ஸ பரபா மாந்யத ந 
பரமாநவாபவாத
பர ஜீவாநம்முல கந்ருதமே 
பா ஷிஞ் சேரய்ய த் யாக ராஜநுத

pallavi
enta nErcina enta jUcina enta vAralaina kAnta dAsulE
anupallavi
santatambu shrIkAnta svAnta சித்த
Anta maina mArga cinta lAni vAr-
charanam
parahimsa para bhAmAnya
dhana para mAnavapa vAda
para j vanamulaka nrtamE
bhASinchErayya த்யகரஜனுட
Meaning:
     இலக்ஷ்மிநாயகனாகிய பகவானின் திருவுள்ளதிற்குச் சம்மதமான பரமார்த்த வழியில் அனவரதமும் சிந்தனையற்றவர்கள் எவ்வளவு கற்றாலும் எவ்வளவு பார்த்தாலும் (அனுபவம் பெற்றாலும்)எப்படிப்பட்டவராயினும் அவர்கள் பெண்களுக்கு அடிமைகளேயாவர்.
     பிறரை துன்புறுத்தியும், பிறர் பெண்டிர்க்கும், செல்வத்திற்கும் ஆசை கொண்டும், பிறரை நிந்தனை செய்தும்,தமது மனைவி மக்களின் சீவனதிற்காகப பொய் பேசியும் (மாந்தர்)திரிகின்றனர் 

பிரியா சகோதரிகள் ஜேசுதாஸ் 
   
     

Thursday, April 26, 2012

எவருரா நிநுவிநா க திமாகு-evaroora ninuvinaa ka thima

பல்லவி 

எவருரா நிநுவிநா க திமாகு (எ)

அனுபல்லவி 

ஸ்வரக்ஷக நித்யோத்ஸ சீதாபதி (எ)

சரணம் 

1.ராதா நாது பை நீத ய விந-
ராதா முரவைரி கா தா த ய ப ல்க
ராதா யிதி மரியாதா நாதோ 
வாத மா நே பே த மா மாகு (எ)


2.ராக நந்நேச ந்யாயமா ப-
ராகா நேநண்டே ஹேயமா ராமா 
ராகா சசிமுக நீ கா ஸிஞ்சிதி
ஸாகுமா புண்ய ஸ்லோகமா மாகு (எ)

3.ஸ்ரீசாரி க ணாராதிவி நா-
தா சா தெ லியக போ திவி ஆப-
கே சார்ச்சித பாலிதேசா நவ 
காசமா ஸ்வப்ரகாசமா மாகு (எ)

4.ராஜா பி கு நீ கேலரா த்யாக-
ராஜார்ச்சித தாளஜாலரா
ஈ ஜாலமு ஸேய ராஜா ப் ரோவ ஸங்-
கோசமா ஸுரபூ ஜமா மாகு (எ)
Meaning: 

    எங்களுக்கு உன்னையன்றி வேறு யார் கதி? யாகங்களை காப்பவனே! சதா 
உத்சவ வைபவங்களுடன் விளங்குபவனே! சீதாபதி!  என் மீது கருணை வராதா? என் முறையைக்  கேளாயோ?  நீ முராசுரனை மாய்த்தவனல்லவா?  பரிவுடன் என்னுடன் பேசலாகாதா?  இது மரியாதையா? என்னுடன் வாதா? நான் வேற்று மனிதனா? 


     தரிசனம் அளிக்காமல் நீ என்னை வருத்துவது நியாயமா? என்னிடம் பராமுகமா? என்னை கண்டால் வெறுப்பா? பூர்ண சந்திர வதனனே! நான் உன்னையே விரும்பினேன். புன்னியாத்மாக்களால் போற்றப் படுபவனே!
காப்பாற்று.
  
     ஸ்ரீபதி எதிரிகளை ஒழிப்பவனே! என் ஆசைகளை நீ அறியவில்லை. பரமசிவனால் வணங்கப்பெருபவனே! ஈசர்களையும் காத்தருள்பவனே! உனக்கு அவகாசமில்லையோ? சுயம் பிரகாசனே!


    ராஜ! உனக்கேன் இந்த பிகு? நான் இனி தரியேன். ஜாலம் வேண்டாம். என்னை காக்க உனக்கு சங்கோசமா? கற்பகதருவை நிகர்த்தவனே!
     

எவரிமாட விந்நாவோ ராவோ-evarimata vinnaavo raavo

பல்லவி 

எவரிமாட விந்நாவோ ராவோ 
இந்து லேவோ பளி பளி (எ)

அனுபல்லவி 

அவநிலோநார்ஷேய பௌருஷேய மந்தி
சோத் ய மெறுக லேநய்ய (எ)

சரணம் 

ப க்த பராதீநுடநுசு ப ரம
பா க வதுல 
வ்யக்தரூபுடை பலிகிந முச்சுட
யுக்த மநுசு நுண்டி 
சக்திக ல ம ஹாதேவுடு நீவநி 
ஸந்தோஷமுந நுண்டி 
ஸத்த சித்துட கு த்யாக ராஜநுத
ஸத்தியஸந்து ட நுகொண்டி நிலலோ(எ)


Meaning 

     யாருடைய பேச்சைக் கேட்டாயோ?(அதன் விளைவாக)வரமாட்டாயோ? அல்லது நீ இங்கு இல்லையோ? நன்று, நன்று.
      இவ்வுலகில் ரிஷிகளின் வாக்கையும் மனிதர் இயற்றிய நூல்களையும் ஆராய்ந்தும் இவ்வாச்சர்யத்தை என்னால் அறியக்கூடவில்லை.

  "நான் பக்தர் வசப்பட்டவன்"என்று வெளிப்படையான உன் அவதார உருவங்களில் பரமபாகவதர்களிடம் நீ கூறிய வரலாறுகளைக் கேட்டு நான் இதுவே தகுதிஎன்றிருந்தேன்.சக்தியுடைய பெருந்தெய்வம் நீ யென்று நம்பி மகிழ்சியுற்றிருந்தேன்.  நிலையான சித்தமுள்ள தியாகராஜனால் வணங்கப்ப்படுபவனே! நீ சத்தியசந்தன் என்று உறுதி கொண்டிருந்தேன். (ஆயினும் நீ யாருடைய பேச்சைக் கேட்டாயோ? இது என்ன விந்தை)
  

      
Part I
Part IIPart III

Wednesday, April 25, 2012

எவரிகை யவதார மெத்திதிவோ-evarikai yavathaara methithivo

பல்லவி 

எவரிகை யவதார மெத்திதிவோ
இபுடை ந தெ லுபவய்யா ராமய்யா நீ (எ)

அனுபல்லவி 

அவநிகி ரம்மநி பிலிசிந மஹரா- 
ஜெவடோ வாநிகி ம் ரொக்கெநு ராம (எ)

சரணம் 

வேத வர்ண நீயமௌ நாமமுதோ 
விதி ருத் ருலகு மேல்மியகு ரூபமுதோ 
மோத ஸத நமகு படு சரிதமுதோ
முநிராஜவேஷியௌ த்யாக ராஜநுத நீ (எ)

Meaning:

     யார் பொருட்டு நீ அவதாரம் எடுத்தனையோ? இப்பொழுதாகிலும் கூறுவாய் இராமையா! உன்னை இவ்வுலகிற்கு எழுந்தருளுமாறு அழைத்த மகானுபாவரை நான் வணங்குகிறேன்.
     வேதங்களால் வருணிக்கபெரும் திவ்ய நாமத்துடனும்,பிரமனுக்கும் சிவனுக்கும் மேலான உருவத்துடனும்,ஆனந்ததிற்கு உறைவிடமான நற்சரிதத்துடனும், ராஜரிஷியின் கோலத்துடனும் (நீ யார் பொருட்டு அவதரிதனையோ?

     

எவரநி நிர்ணயிஞ்சிரிரா நிந்-evarani nirnayinchiraa nin-

பல்லவி 

எவரநி நிர்ணயிஞ்சிரிரா நிந்-
நெடலாராதி ஞ்சிரிரா நரவரு (எ)

அனுபல்லவி 

சிவுட நோ மாதவுடநோ கமல-
ப வுட நோ பரப் ரஹ்ம்ம நோ (எ)

சரணம் 

சிவமந்த்ரமுநகு மா ஜீவமு மா-
தவமந்த்ரமுநகு ரா ஜீவமு ஈ 
விவரமு தெ லிஸிந க நுலகு ம்ரொக்கெத
விதரண கு ண த்யாக ராஜாவி நு தா நிந (எ)




Meaning:


     நரஸ்ரேஷ் டர்கள் உன்னை யாரென்று நினைத்தனர்?எவ்வாறு ஆராதித்தனர்?சிவன் என்றா, விஷ்ணு என்றா, பிரமன் என்றா, பரப்ரமம் என்றா (யாரென்று நிர்ணயித்துப் பூஜை செய்தனர்?)
     சிவ  மந்த்ரமாகிய "நமச்சிவாய" என்பதில் ""என்னும் எழுத்தே உயிர்.விஷ்ணு மந்த்ரமாகிய "ஓம் நமோ நாராயணாய" என்பதில் "ரா"என்ற எழுத்தே உயிர். இவ்விவரங்களை அறிந்த பெரியோர்களை நான் வணகுகிறேன், உதார குணமுடையவனே!

Tuesday, April 24, 2012

எ ந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaloorake yunthu joothamu

பல்லவி 


எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு
யெவரடி கே வாரு லேதா ஸ்ரீராம (எந் )


அனுபல்லவி 


கொந்நாளளு ஸாகேதபுர மேல லேதா 
கோரிக முநுலகு கொ ந்ஸாக லேதா (எந்)


சரணம் 


ஸதி மாடல நாலகிஞ்சி ஸத் ப க்த கோடுல 
ஸம்ரக்ஷிஞ்சக லேதா 
மதிமந்துல ப் ரோசே மதமு மாத நலேதா 
ஸததமது ஸ்ரீ தியாக ராஜூ நம்மக லேதா (எந)









உபசாரமு ஜேஸே வாரு ந் நாரநி மரவகுரா-upacharamku jeseva runnaarani maravakura











பல்லவி


உபசாரமு ஜேஸே வாரு ந் நாரநி மரவகுரா 




அனுபல்லவி 


க்ருப காவலெநநி நே நீ -


கீர்த்தி நி பல்குசு நுண்ட க 


சரணம் 



வாகிநே பதிலமுகா வாதாத்மஜுடு ந்நாட நி 


ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரி யு ந் நார நி 


ஏகாந்தமுநநு ஜாநகி ஏர்ப்படி யுந்தநி 


ஸ்ரீகாந்த பருலேலநி ஸ்ரீ த்யாக ராஜவிநுத 




Meaning






உன் க்ருபைக்கு ஏங்கி, உன் புகழையே நான் பாடிக்கொண்டிருக்கையில், 

உபசாரம் செய்வதற்கு பலர் உள்ளனரென்று நினைத்து என்னை 

மறந்துவிடாதே.

     வாயிலில் அனுமன் விழிப்புடன் இருப்பதாலும், திரு மிகுந்த உன் 

தம்பியர் சேர்ந்திருப்பதாலும், ஏகாந்த சமயத்தில் சீதாதேவி உன்னுடன் 

இருப்பது உறுதியாதலாலும், பிறர் எதற்கு என்று (என்னை 

மறந்துவிடாதே ) ஸ்ரீகாந்தனே






`Pallavi

upacāramu jēsēvārunnārani maravakurā

Just because there are people to render service to You, please do not forget me. 

Anupallavi
kṛpa kāvalenani nē nī 

kīrtini palkucunuṇḍaga (upacāra)

While I am extolling (here) Your fame in order to obtain Your grace,
just because there are people to render service to You, please do not forget me.

Charanam
vākiṭanē 1padilamugā vātātmajuḍunnaḍani
2śrī-karulagu nī tammulu cēriyunnārani
ēkāntamunanu 3jānakiyērpaḍஇயுன்னடனி


śrī kānta parulēlani śrī tyāgarāja vinuta (upacāra)

Just because Anjaneya – son of Vayu - is present vigilantly at the door itself,
 just because Your younger brothers – who do Your bidding –
are along with You, and just because Janaki is anointed in Your privacy,
O Consort of Lakshmi! O Lord praised by this Tyagaraja! Thinking
 that as to why should You need others (for rendering service), please do not forget me. 

Monday, April 23, 2012




பல்லவி 
இலலோ ப்ரனதார்த்திஹருட நுசு 
ரேவரிடி ரே சங்கருட நி நீ (இ)

அனுபல்லவி 
த லசி கரகி சிரகாலமு பத முந 
த ண்ட மிடி ந நாயெட த ய லேதா யெ (இ)

சரணம் 
கர சரணயுரமு நொஸலு புஜமுலு 
த ரணி ஸோக ம்ரொக்கக லேதா
சரணமநுசு மொரலிட லேதா பஞ்-
சநதீ ச தியாக ராஜநுத நீ  (இ)

Meaning:

வணங்குபவர் துயர் தீர்ப்பவன் என்றும் , நலம் புரிபவன் என்றும்
இவ்வுலகில் யார் உனக்கு பெயரிட்டனர்? உன்னையே நினைந்து 
உள்ளமுருகி வெகுகாலம் உனது திவடிகளில் தண்டனிட்ட என்னிடம் 
உனக்கு சிறுதும் தயை இல்லாமற் போயிற்றே!

கை, கால், மார்பு, நெற்றி, தோள்,ஆகிய எட்டு அவயவங்கள் 
பூமியிற்படியுமாறு நான் உன்னை 

(சாஷ்டாங்கமாக)வணங்கவில்லையா?நீயே சரண் என்று

 முறையிடவில்லையா?பஞ்சநதீசனே! தியாகராஜன் ணங்கும்தெய்வமே! 

Pallavi
ilalō 1praṇatārti haruḍanucu 
pērevariḍirē śaṃkaruḍani nīk(ilalō)

Whoever, in this World, gave You name as ‘remover of the distress of those
who bow down before You’, and as the ‘one who causes Auspiciousness’?
Anupallavi
talaci karagi cira kālamu padamuna 
daṇḍamiḍina nāyeḍa daya lēdāye ( ilalō)

There was no mercy towards me who had been prostrating
 at Your feet becoming emaciated thinking of You for a long time. 
Charanam
2kara 3caraṇayuramu nosalu bhujamulu 
dharaṇi sōka mrokkaga lēdā
śaraṇanucunu moraliḍa lēdā 
pañca nadīśa tyāgarāja nuta nīk(ilalō)

Did I not prostrate with my hands, feet, chest, forehead and shoulders
to touch the ground? did I not beseech You saying ‘Give me refuge’?O Lord of Thiruvaiyaru - five rivers! O Lord Praised by this Thyagaraja

ஆட மோடி க லதே ராமய்யா மாட (லா)-Aaadamodi galade raamayaa maada


பல்லவி:
ஆட மோடி க லதே ராமய்யா மாட (லா)
அனுபல்லவி 
தோடு நீட நீவே யநுசு பக்திதோ
கூ டி பாத மு பட்டி ந நாதோ மாட (லா)
சரணம் 
சது வுலந்நி தெலிஸி சங்கராம்சுடை 
ஸத யுடா சுக ஸ ம்ப வுண்டு ம்ரொக்க 
கத லு தம்முநி ப ல்க ஜேஸிதிவி 
கா கநு தயாகரா ஜு ஆடி ந மாட (லா)

Meaning in tamil.


துணையும் நிழலும் நீயே யென்று பக்தியுடன் உன் திருவடிகளைப் பற்றிய என்னுடன் பேசுவதற்கு உனக்கு மோடியா (பிகுவா)

கலைகனைத்தையும் கற்றுச் சிவபெருமானின் அம்சம் பெற்று, தயை நிரம்பிய ஆஞ்சநேயன் உன்னை வணங்க, உன் வரலாறுகளைக் கூறும்படி உன் தம்பிக்கு உத்திரவிட்டாயே தவிர (நீ அவனுடன் பேசவில்லை) ஆகவே இத்த்யகராஜன் உனக்கு எம்மாத்திரம்?  



Part I

PartIII

Part II
In english
Pallavi

ADamODi galadE rAmayya! mATa 
(lADamODi) 

Anupallavi 

tODu nIDa nIve anucunu bhakti gUDi nI pAdamu baTTina nAto mATa 
(lADamODi) 


CharaNam 

caduvulanni delisi shankarAntshuDai 
sadayu-dAsuga- sambhavuDu mrokka 
kadalu tammuni balka jesithivi
gAkanu tyAgarAjE pAti mATa 
(lADamODi)
Meaning:



O Ramayya! You seem to feel too proud, too uppish, even to talk to me. I have sought you as my sole support and shelter and stuck to you steadfastly and devotedly but you seem to feel .. Do you remember that when kindly Anjaneya, an offshoot of Shiva Himself, at his very first meeting with you desired to be informed of your antecedents, you did not respond directly, but commanded Lakshmana to speak to him? When such was the lot of Anjaneya himself, who can expect you to talk to this frail Tyagaraja?