Search This Blog

Thursday, April 26, 2012

எவரிமாட விந்நாவோ ராவோ-evarimata vinnaavo raavo

பல்லவி 

எவரிமாட விந்நாவோ ராவோ 
இந்து லேவோ பளி பளி (எ)

அனுபல்லவி 

அவநிலோநார்ஷேய பௌருஷேய மந்தி
சோத் ய மெறுக லேநய்ய (எ)

சரணம் 

ப க்த பராதீநுடநுசு ப ரம
பா க வதுல 
வ்யக்தரூபுடை பலிகிந முச்சுட
யுக்த மநுசு நுண்டி 
சக்திக ல ம ஹாதேவுடு நீவநி 
ஸந்தோஷமுந நுண்டி 
ஸத்த சித்துட கு த்யாக ராஜநுத
ஸத்தியஸந்து ட நுகொண்டி நிலலோ(எ)


Meaning 

     யாருடைய பேச்சைக் கேட்டாயோ?(அதன் விளைவாக)வரமாட்டாயோ? அல்லது நீ இங்கு இல்லையோ? நன்று, நன்று.
      இவ்வுலகில் ரிஷிகளின் வாக்கையும் மனிதர் இயற்றிய நூல்களையும் ஆராய்ந்தும் இவ்வாச்சர்யத்தை என்னால் அறியக்கூடவில்லை.

  "நான் பக்தர் வசப்பட்டவன்"என்று வெளிப்படையான உன் அவதார உருவங்களில் பரமபாகவதர்களிடம் நீ கூறிய வரலாறுகளைக் கேட்டு நான் இதுவே தகுதிஎன்றிருந்தேன்.சக்தியுடைய பெருந்தெய்வம் நீ யென்று நம்பி மகிழ்சியுற்றிருந்தேன்.  நிலையான சித்தமுள்ள தியாகராஜனால் வணங்கப்ப்படுபவனே! நீ சத்தியசந்தன் என்று உறுதி கொண்டிருந்தேன். (ஆயினும் நீ யாருடைய பேச்சைக் கேட்டாயோ? இது என்ன விந்தை)
  

      
Part I
Part IIPart III

No comments:

Post a Comment