Search This Blog

Thursday, April 26, 2012

எவருரா நிநுவிநா க திமாகு-evaroora ninuvinaa ka thima

பல்லவி 

எவருரா நிநுவிநா க திமாகு (எ)

அனுபல்லவி 

ஸ்வரக்ஷக நித்யோத்ஸ சீதாபதி (எ)

சரணம் 

1.ராதா நாது பை நீத ய விந-
ராதா முரவைரி கா தா த ய ப ல்க
ராதா யிதி மரியாதா நாதோ 
வாத மா நே பே த மா மாகு (எ)


2.ராக நந்நேச ந்யாயமா ப-
ராகா நேநண்டே ஹேயமா ராமா 
ராகா சசிமுக நீ கா ஸிஞ்சிதி
ஸாகுமா புண்ய ஸ்லோகமா மாகு (எ)

3.ஸ்ரீசாரி க ணாராதிவி நா-
தா சா தெ லியக போ திவி ஆப-
கே சார்ச்சித பாலிதேசா நவ 
காசமா ஸ்வப்ரகாசமா மாகு (எ)

4.ராஜா பி கு நீ கேலரா த்யாக-
ராஜார்ச்சித தாளஜாலரா
ஈ ஜாலமு ஸேய ராஜா ப் ரோவ ஸங்-
கோசமா ஸுரபூ ஜமா மாகு (எ)
Meaning: 

    எங்களுக்கு உன்னையன்றி வேறு யார் கதி? யாகங்களை காப்பவனே! சதா 
உத்சவ வைபவங்களுடன் விளங்குபவனே! சீதாபதி!  என் மீது கருணை வராதா? என் முறையைக்  கேளாயோ?  நீ முராசுரனை மாய்த்தவனல்லவா?  பரிவுடன் என்னுடன் பேசலாகாதா?  இது மரியாதையா? என்னுடன் வாதா? நான் வேற்று மனிதனா? 


     தரிசனம் அளிக்காமல் நீ என்னை வருத்துவது நியாயமா? என்னிடம் பராமுகமா? என்னை கண்டால் வெறுப்பா? பூர்ண சந்திர வதனனே! நான் உன்னையே விரும்பினேன். புன்னியாத்மாக்களால் போற்றப் படுபவனே!
காப்பாற்று.
  
     ஸ்ரீபதி எதிரிகளை ஒழிப்பவனே! என் ஆசைகளை நீ அறியவில்லை. பரமசிவனால் வணங்கப்பெருபவனே! ஈசர்களையும் காத்தருள்பவனே! உனக்கு அவகாசமில்லையோ? சுயம் பிரகாசனே!


    ராஜ! உனக்கேன் இந்த பிகு? நான் இனி தரியேன். ஜாலம் வேண்டாம். என்னை காக்க உனக்கு சங்கோசமா? கற்பகதருவை நிகர்த்தவனே!
     

No comments:

Post a Comment