Search This Blog

Saturday, May 19, 2012

காலஹரணமேலரா ஹரே ஸீதாராம-kalaharanamelara hare seetharama




பல்லவி 
காலஹரணமேலரா ஹரே ஸீதாராம(கா)
அனுபல்லவி 
காலஹரணமேல ஸுகுண
ஜால கருணாலவால (கா)
சரணம் 
1.சுட்டி சுட்டி பக்ஷுவெல்ல
செட்டு வெத குரீதி பு விநி 
புட்டுலேக நீ பத முல 
ப ட்டுகொந்த நந்நு  ப் ரோவ (கா)
3.தி ந தி நமுநு திரிகி திரிகி
தி க்குலேக சரணுஜொச்சி 
தநுவு தநமு நீதே யண்டி 
த்யாக ராஜவிநுத ராம (கா)
Meaning
ஹரே சீதாராம!என்னைக் காப்பாற்ற இன்னும் தாமதமேன்?நற்குண  நிதியே!கருணையின் உறைவிடமே!பறவைகள் சுற்றிச் சுற்றிப் பறந்து (உட்காருவதற்கு)மரத்தை தேடுவதை போல, உலகில் மறு பிறப்பை தவிர்க்க உதவும் உன் பாதங்களைப் பற்றியுள்ள என்னைக் காக்க (இன்னும்) தாமதமேன்?    
      உலகில் மற்ற தர்மங்களை எவ்வளவு புகழ்ந்தாலும் (அவற்றுள்) த்யா கமே தலைசிறந்து விளங்குவதுபோல (சிறு பலன்களையளிக்கும்)இதர தெய்வங்களை விடச் சிறந்த உன்னைத் தவிர என்னைக் காப்பாற்றுபவர் வேறு யாருளர் ?
     அனுதினமும் இங்குமங்கும் திருநது திருந்து திக்கற்று உன்னையே சரணமடைந்து என்னுடலும் பொருளும் உனதே என்று துணிந்தேன் 
என் இஷ்ட தெய்வமே!என் விருப்பங்களை அளிப்பது உனக்குக் கஷ்டமா?

இத் தியாகராஜனின் மனோரதங்களை யளிக்க் (இன்னும் தாமதமேன்?)

No comments:

Post a Comment