Search This Blog

Tuesday, May 22, 2012

கா ந முர்த்தே ஸ்ரீ கிருஷண வேணு -kana moorthe sreevenu

பல்லவி 
கா ந முர்த்தே ஸ்ரீ கிருஷண வேணு 
கா நலோல தரிபு வநபால பாஹி (கா) 
அனுபல்லவி 
மாநிநீ மணி ஸ்ரீருக்மினி 
மாநஸாபஹார மார ஜநக  திவ்ய (கா)
சரணம் 
நவநீதசோர நந்த ஸத் கிசோர 
நரமித்ரதீ ர நரசிம்ஹ சூர 
நவமேக தேஜ நக ஜாஸஹஜ 
நரகாந்தகாஜ நத த்யாகராஜா (கா)
Meaning
திவ்வியமான இசைவடிவமானவனே !ஸ்ரீக்ருஷ்ணா!குழலூதுவதில் ப்ரியமுள்ளவனே!மூவுலகங்களையும் காப்பவனே! என்னை காத்தருள்.பெண்களுள் இரத்தினம் போன்ற ருக்மிணி   தேவியின் 
மனங்கவர்பவனே!மதனைப் பிற ப்பித்தவனே!  
     வெண்ணை திருடியுண்பவனே!நந்தகோபன் திருமகனே!அருச்சுனன் தோழனே!தீரனே!நரசிங்கனே!சூரனே!நீருண்ட மேகத்தை நிகர்த்த 
ஒளியுடையவனே!பார்வதி சகோதரனே !நரகாசுரனை மாய்தவனே!பிறப்பற்றவனே!தியாகராஜன் வணங்கும் தெய்வமே! 

No comments:

Post a Comment