Search This Blog

Thursday, June 7, 2012

க் ரஹபல மேமி ஸ்ரீராமாநு- grahapalamemi sreeraamanu

பல்லவி 
க் ரஹபல மேமி ஸ்ரீராமாநு- (க் ர)
க் ரஹபலமே பலமு 
அனுபல்லவி 
க் ரஹபல மேமி தேஜோமய வி-
க் ரஹமுநு த் யாநிஞ் சேவாரிகி நவ  (க் ர)
சரணம் 
க் ரஹபீட ல பஞ்சபாபமுல நா-
க் ரஹமுல க ல காமதி ரிபுல நி -
க் ரஹமு சேயு ஸ்ரீ ஹரிநி பஜிஞ்சேத்யா 
க ராஜுநிகி ரஸிகாக் ரேஸருலகு(க் ர)
   

Meaning
கிரக பலம் எம்மாத்திரம்?ஸ்ரீ ராமனின் அனுக்ரஹ பலமே உண்மையான பலம்.ஒளிமயமான அவனுடைய திருஉருவத்தை தியானிப்பவர்களுக்கு 
நவக்ராஹ பலம் எம்மாத்திரம்?
     கிரகங்களினால் ஏற்படும் பீடைகளையும்,ஐந்துவகைப் பாவங்களையும்,  அகந்தை நிறைந்த காமம் முதலிய தீக்குணங்களையும் நாசம் செய்யும் ஸ்ரீ ஹரியைத் துதிக்கும் தியாகராஜனுக்கும், சரசகுணம்  படைத்த பக்தர்களுக்கும் (கிரகபலம் எம்மாத்திரம்?)
)
  




No comments:

Post a Comment