பல்லவி
கொலுவையுந்நாடே கோத ண் டபாணி (கொ )
அனுபல்லவி
ஸலலிதமதுலை ஸாரெகு சீலுலை
வலசுசு கோரி வச்சி சேவிம்பக (கொ )
சரணம்
3.உடு ராஜமுகு டு சேஷய்யபைநி செலங்க க நி
புட மிகுமாரி ஸு க ந்த மு பூய நம்மிநவாரலகே
கட கண்டநி கோரிந வரமிய்ய த்யாக ராஜூ நெநருந
அடு க டு கு கு மடு புல நந்தீ ய ஸ்ரீராமைய்ய(கொ )
Meaning
நயமான சுபாவத்தையுடையவர்களும் .என்றும் நல்லொழுக்கம் உடையவர்களும் பக்தியுடன் வந்து சேவிக்க கோதண்டபாணியாகிய இராமன் கொலு வீற்றிரருக்கிறான்.
சீதை,பரதன் முதலியோருடன் இனிய நைவேத்தியங்களைப் பிரி யத்துடனும் குதூகலத்துடனும் அமுது செய்து, கோடி மின்னல்கலை ப்போல் ஒளிவீசும் பீதாம்பரத்தையும் அணிகளையும் அணிந்துகொண்டு , வேதத்தில் கூறப்பட்டுள்ள ஸனகர் முதலியோர்களின் வார்த்தைகளினால் மகிழ்ச்சியடைந்து ,தஞ்சமடைந்தவர்களைஆதரித்துகொண்டு (கொலு வீற்றிருக்கிறான்)
நறுமணம் வீசும் வாசனைத் திரவியங்கள் பரிமளிக்க், சந்நிதியில் தேவலோகத்துக் கணிகையர் நன்கு நடம்புரிய,மேலும பராசரர், நாரதர் முதலிய ரிஷிகள் துதிக்க, மிகுந்த நன்றியுடன் இந்திரன், நான்முகன் முதலியோர் சேவித்து உடல் புளகிதம் அடையுமாறு (கொலு வீற்றிரு
க்கிறான்.)
சந்திரனை நிகர்த்த முகமுடைய இராமபிரான் ஆதிசேடனாகிய படு க்கையின் மீது விளங்குவதைக் கண்டு பூமிதேவியின் புதல்வியாகிய சீதை வாசனை திரவியங்களைப் பொழிய,நம்பியவர்கள் விரும்பிய வரங்களைக் கடைகண்ணால் அளித்து வர , தியாராஜன் நன்றியுடன் ஒவ்வோரடிக்கும் வெற்றிலைச் சுருள்களை எடுத்தளிக்க (இராமன் கொலு வீற்றிருக்கிறான் )
No comments:
Post a Comment