பல்லவி
உபசரமுலநு சேகொநவய்யா
உரக ராஜசயந (உ)
அனுபல்லவி
சபலாகோடி நிபா ம்ப ரத ஸ்ரீ
ஜாநகீபதி தய சேஸி நா (உ)
சரணம்
கபடநாடக ஸூத்ரதா ரிவை
காமிதப லமு நொஸங்கே ராம
அபரிமித நவரத்நமுலு பொதிகிந
அ பரஞ்சி கொ டு கு நீகே தகு நய்ய(உ)
Meaning
Part I
மின்னற் கூட்டத்தை யொத்த ஒளியுடைய பீதகவா வாடையை அணிந்தவனே!ஜானகிபதியே!ஆதிசேஷன் மீது சயனித்தவனே!கருணை கூர்ந்து நான் அளிக்கும் உபசாரங்களை ஏற்றுக்கொள்.
கபட நாடக சூத்ரதாரியாக் (உலகை ஆட்டுவித்து ) விரும்பிய பலன்களை அளிக்கும் இராம!எண்ணற்ற நவரத்தினங்களிழைத்த இப்பொற்குடை
உனக்கே தகுந்ததாகும்.
மின்ன்ற் கொடிகளைப்போல் பிரகாசிக்கும் பத்தரை மாற்றுத்
தங்கக்கம்பிகள் அமைந்து சரத் காலத்துச் சந்திரன் போல் ஒளிவீசும்
இவ்விரு சாமரங்கள் உனக்கே ஏற்றவை.
Part II
மல்லிகை,சம்பங்கி, மருக்கொழுந்து,இருவாட்சி,வெட்டிவேர் முதலியவற்றால் அமைக்கப்பெற்று நறுமணம் வீசும் இவ்விசிறி இத்யகராஜன் பூசிக்கும் உனக்கே தகுந்ததாகும்.
No comments:
Post a Comment